புது, புது வாக்குறுதிகளை வாரி இரைக்கிறது மத்திய அரசு – மார்க்சிஸ்ட் சாடல்

news18
Updated: February 13, 2018, 5:36 PM IST
புது, புது வாக்குறுதிகளை வாரி இரைக்கிறது மத்திய அரசு – மார்க்சிஸ்ட் சாடல்
ஜி.ராமகிருஷ்ணன்
news18
Updated: February 13, 2018, 5:36 PM IST
‘மத்திய அரசு பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மேலும், மேலும் புதிய வாக்குறுதிகளை வாரி இரைத்து வருகிறது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  விவசாய விளைபொருட்களுக்கு சாகுபடி செலவுக்கு மேல் அரை மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்வோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்  என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மேலும், மேலும் புதிய வாக்குறுதிகளை மத்திய அரசு வாரி இரைத்து வருகிறது.

மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிறு, குறு தொழில்களை பாதித்ததோடு, தொழில் வளர்ச்சியும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியே குறைந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நலன் காக்க ‘செங்கொடி உயரட்டும் - தமிழகம் நிமிரட்டும்’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20 வரை நடைபெற உள்ளது.

மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட  தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டின் நிறைவு நாளான பிப்ரவரி 20 ஆம் தேதி தூத்துக்குடியில் கட்சித் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பும் அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...