• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போராட்டமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு - சிபிஎம் பாலகிருஷ்ணன்

போராட்டமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு - சிபிஎம் பாலகிருஷ்ணன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டங்களெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல், மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களை பாதுகாக்கவும், தொழிலாளர் சட்டங்களை பன்னாட்டு நிறுவனங்கள் பின்பற்றிட வலியுறுத்தியும் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையை கோஷங்களாக முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்றார்.

    மேலும் பேசிய அவர், ஹைட்ரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடையும். மத்திய அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கும் ஆதரவாக மாநில அரசு செயல்பட்டதால் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசின் காலம் தாழ்த்திய நடவடிக்கை என்றார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொருத்தவரையில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மக்கள் போராட்டங்கள் மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் செயல்படுகிறது’’ என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: