• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒப்பந்தக் காலம் முடிந்தாலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் - மத்திய அரசு விளக்கம்!

ஒப்பந்தக் காலம் முடிந்தாலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் - மத்திய அரசு விளக்கம்!

கோப்பு படம்

கோப்பு படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சுங்கச்சாவடி ஒப்பந்தங்கள் காலாவதி ஆனாலும், கட்டணம் வசூலிப்பதை நிறுத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    சுங்கக் கட்டணம் வசூல் செய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் நவம்பர் 2019-லேயே ஒப்பந்தக் காலம் முடிந்தும், தாம்பரம் - திண்டிவனம் வழித்தடத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

    அப்போது விளக்கமளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் மற்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆகியோர், ஏப்ரல் 1, 2005 முதல் நவம்பர் 30, 2019 வரை, பரணூரில் இருந்து 245 கோடி ரூபாயும், ஆத்தூரில் இருந்து 203 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டதாக கூறினர்.

    இந்த சுங்கச்சாவடிகள் உட்பட்ட சாலையை முழுமையாக அமைப்பதற்கு 922 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், அவற்றில் 448 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

    மீதமுள்ள 473 கோடி ரூபாய் இன்னும் வசூலிக்கப்படவில்லை எனவும், எனவே மூலதனச் செலவை பெறும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு, அரசுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, அரசியல் கட்சி கொடிகள் கொண்ட வாகனங்கள் கட்டணத்தை செலுத்த மறுப்பதும், மூலதன செலவை பெறமுடியாமல் போவதற்கு இதுவும் காரணம் என்றும் குறிப்பிட்டனர்.

    இதுகுறித்து விரிவான அறிக்கையை மார்ச் 23-க்குள், தேசிய நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: