ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழிலும் தபால் துறை தேர்வு: நீதிமன்றத்தில் அறிவிப்பாணையை தாக்கல் செய்தது மத்திய அரசு!

தமிழிலும் தபால் துறை தேர்வு: நீதிமன்றத்தில் அறிவிப்பாணையை தாக்கல் செய்தது மத்திய அரசு!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தபால் துறை தேர்வை மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்கும் புதிய அறிவிப்பாணையின் நகலை தாக்கல் செய்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தபால் துறை தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

  தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்டது.

  இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டதால் இதனை எதிர்த்து தி.மு.க எம்எல்ஏ எழிலரசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது, தபால் துறைத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தபால் துறை தேர்வை மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்கும் புதிய அறிவிப்பாணையின் நகலைத் தாக்கல் செய்தார்.

  இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தி.மு.க எம்.எல்.ஏ தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Postal Exam