Home /News /tamil-nadu /

ஓஎன்ஜிசி...வேதாந்தா...கெய்ல் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் செய்கிறது மத்திய அரசு!

ஓஎன்ஜிசி...வேதாந்தா...கெய்ல் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் செய்கிறது மத்திய அரசு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
தமிழகத்தில் 2 இடங்கள் உட்பட 55 இடங்களில்  ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திடுகிறது.

இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கு வேதாந்தா, ஓஎன்ஜிசி மற்றும் கெயில் உட்பட 5 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, 55 இடங்களுக்குமான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.

இதற்கு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சிதம்பரத்தையும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், டெல்லியில் இதற்கான சந்திப்பு நடைபெறுகிறது. ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது என்று தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் 2 இடங்கள் உட்பட 55 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Central government, Hydrocarbon, ONGC, Tamil Nadu, Vedanta

அடுத்த செய்தி