பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசுதான் வரிகளைக் குறைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை தேனாம்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘முதல்வரின் அம்மா மினி கிளினிக் திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
  சென்னையில் மொத்தம் 200 அம்மா மினி கிளினிக்குகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டு 50 சதவீதத்திற்கும் மேல் தற்போது அம்மா கிளினிக்கள் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த மெட்ரோ திட்டம் வட சென்னை மக்களின் பல நாள் கனவு. வட சென்னை பகுதி தொழிலாளர்கள் எழும்பூர் உள்ளிட்ட பகுதிக்குக்கு வரவும், வட சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மெட்ரோ சேவை உதவும். முதல்கட்ட 34 கி்.மீ மெட்ரோ பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்திருந்தார். வட சென்னை மெட்ரோ திட்டம் மூலம் என்னுடைய கனவும் நிறைவேறீயுள்ளது.

  2026-க்குள் போக்குவரத்து நெரிசலற்ற நகரமாக சென்னை மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டில் வட சென்னை பிரமாண்ட வளர்ச்சி பெறும். கடற்பாசி பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். மென் கடல், ஆழ் கடல் என இருவகை கடல் உண்டு. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை மாவட்டங்களில் கடற்பசு அதிகம் இருக்கிறது. மக்களுக்கு ஞாபக மறதி் அதிகம் என திமுகவினர் நினைக்கின்றனர். திமுக ஊரை அடித்து உலையில் போட்டதை தமிழக மக்கள் மறக்கமாட்டர். 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற திமுக சாதித்தது என்ன? தமிழின, தமிழ் மொழி, தமிழ் நாட்டுக்கு துரோகமிழைத்த கட்சி திமுகதான்.

  நீட் குறித்து கேள்வி எழுப்ப திமுகவிற்கு உரிமையில்லை. அனிதா உள்ளிட்ட மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் திமுக தான். 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு பெரும் பலனை தந்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் விஞ்ஞான பூர்வமாக கொள்ளை அடிப்பது குறித்து மட்டுமே திமுக யோசிக்கும்.

  குடிகாரர்களுக்கு தான் குடிகாரர்கள் பற்றி தெரியும். வசந்தமாளிகை சிவாஜி கணேசன் கதபாத்திரத்தில் வாழ்பவர்கள் ஆ.ராசா போன்றோர். திமுக போல ஊதாறித்தனமாக அதிமுக செலவு செய்யவில்லை. திமுக நடத்திய செம்மொழி மாநாடு மூலம் 2,000 கோடி மக்கள் வரிப்பணம் அழிந்தது. சட்டத்துக்கு உட்பட்டே அரசின் செயல்கள் குறித்து ஊடகங்களில் விளம்பரம் தரப்படுகிறது.
  விளம்பரத்தில் விளம்பரம் தேட திமுகவினர் முயற்சிக்கின்றனர். திமுக வின் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து 10 அத்தியாயாங்கள் எழுத முடியும்.

  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான வாட் வரி மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைவு. வாட் வரி வருவாய் மூலமே உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன. மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தம்பிதுரையை பேச வைத்து தங்க நாற்கர சாலையை தமிழகத்திற்கு கொண்டுவந்தது அதிமுக அரசுதான்.
  மு.க.ஸ்டாலினுக்கு சொந்த புத்தியும் கிடையாது. சொல் புத்தியும் கிடையாது. பிரசாந்த் கிஷோர் புத்திதான் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: