மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய கூறி ஆர்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 • Share this:
  மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குருநாதன், விவசாய தொழிலாளர் சங்கம் செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

  தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி, தமிழ்நாடு விவசாய சங்கமாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தெய்வ நீதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் மத்தியஅரசு உடனடியாக உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்திற்கான மின்தடை சீர்படுத்துவதுடன் 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூர் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  மேலும் படிக்க... Actor Vivek: மரக்கன்றுகள் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய திருவாரூர் வனம் அமைப்பினர்

  இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சங்கிலி முத்து மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: பெரியசாமி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: