Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி!

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு வரும் திங்கட்கிழமை கையெழுத்திடுகிறது.

    இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கு வேதாந்தா, ஓஎன்ஜிசி மற்றும் கெயில் உட்பட 5 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, 55 இடங்களுக்குமான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.

    இதற்கு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சிதம்பரத்தையும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை கையெழுத்தாகிறது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், டெல்லியில் இதற்கான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Central government permit, Hydrocarbon, ONGC

    அடுத்த செய்தி