• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தவறான மருத்துவ கொள்கையால் மாணவர்களை படுகொலை செய்கிறது மத்திய அரசு - கே.பாலகிருஷ்ணன்

தவறான மருத்துவ கொள்கையால் மாணவர்களை படுகொலை செய்கிறது மத்திய அரசு - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழக அரசு மோடி அரசுதான் நாட்டின் பாதுகாப்பு என்பது போல் செயல்படுவதாகவும் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசின் தவறான மருத்துவ கொள்கையால் மாணவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று  மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்பார்த்த படியே தமிழகம் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளது. மொழி பெயர்ப்பு கேள்வி தயாரிப்பது போன்றவைகளில் நிலவும் குளருபடிகளே இதற்கு காரணம்.

நீட் தேர்வால் 2 மாணவிகள் தற்கொலை 

2 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள் அது தற்கொலை அல்ல மத்திய அரசின் தவறான மருத்துவக் கொள்கையால் நடத்தப்பட்ட படுகொலை . தேர்வு முடிவுகளால் துவண்டு போகமால் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் 

நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழக அரசு மோடி அரசுதான் நாட்டின் பாதுகாப்பு என்பது போல் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 27% பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என்ற அவர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சிறமப்படுவதாகவும் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 விருப்ப பாடமாக் கூட இந்தியை ஏற்கமுடயாது

விருப்ப பாடமாக இந்தி படிக்கலாம் என்பது புறவாசல் வழியாக இந்தியை திணிப்பதுதான் என்ற அவர் விருப்ப பாடமாக் கூட இந்தியை ஏற்கமுடயாது என்றார். பிற மாநிலங்களிலும் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதை வலியுருத்தி பிரதமருக்கு முதல்வர் ட்வீட் செய்திருப்பது மறைமுகமாக மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு ஆதரிப்பது போன்றது என்று கூறினார்.

மீண்டும் 8 வழிச்சாலை - ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள்

அதனைத் தொடர்ந்து, 8வழிச்சாலை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகளை தேர்தலுக்கு பின்பு மீண்டும் தொடங்க முயல்கியது மத்திய அரசு. விவசாயிகளை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து விரைவில் மார்சிஸ்ட் போரட்டம் நடத்தும் என்றார்.

8 வழிச்சாலை ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடவேண்டும் என்பதை மார்சிஸ்ட் கோருகிறது. வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில் தமிழக பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

7 தமிழர் விடுதலை விவகாரம்

7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழ அரசு ரெட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டிய அவர் தீர்மானம் போட்டுவிட்டோம் என ஆளுநர் கைகாட்டாமல் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றார்.

Also see... நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவிகள் தற்கொலை

Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: