மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவ கல்லூரிகளிலோ அல்லது மதுரை அரசு மருத்துவ கல்லூரியிலோ சேர்த்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது.

 • Share this:
  மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கல்லூரிக்கு கட்டுமானம் இல்லாததால் மாற்று கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அரசு ஆலோசனை நடத்துவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  பசுமை சைதை திட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்கவிழவை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை வ.வூ.சி தெருவில், இன்று பிறந்தநாள் காணும் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

  அதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை பெறப்பட்ட தடுப்பூசிகள்
  1,50,26,050. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 46,லட்சத்தி 33 ஆயிரத்து 635 போடப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவுக்குள் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது.

  Also Read : சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்டாச்சு, ஆனால் உள்ளாட்சி தேர்தலில்... வியூகம் வகுத்த பழனிசாமி

  பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகையால் தமிழநாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

  தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியிலோ அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளிலோ அல்லது மதுரை அரசு மருத்துவ கல்லூரியிலோ சேர்த்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது.

  அண்டை மாநிலமான புதுச்சேரியில் தமிழ்நாடு மாணவர்களை சேர்ப்பதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் அல்லது மதுரை அரசு கல்லூரிகளில் மருத்துவமனையில் சேர்ப்பது சூழலுக்கு பொருந்தாது. எனவே மாற்று ஏற்பாடாக தமிழ்நாட்டில் மதுரை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பிற அரசு மருத்துவ கல்லூரிகளில் அவர்களை பிரித்து  சேர்ப்பதற்கான யோசனைகள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனை முதலமைச்சர் அறிவிப்பார்.

  Also Read : செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் நிலை என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

  எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதில் காலம் தாழ்த்தப்பட்டதற்க்கு கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக அரசே காரணம். அதிமுக ஆட்சி காலத்தில்  தரப்பட்டிருக்க வேண்டிய அழுத்தத்தை தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில்  தந்து கொண்டிருக்கிரார். தமிழ்நாடு அரசின் முயற்சிக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். தமிழ்நாட்டில் டெல்டாப் பிளஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்ட 9 நபர்களும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: