தேனி மக்கள் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

இந்த ஆய்வகம் எந்த வித கதிர் வீச்சையும் வெளிபடுத்தாததால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

தேனி மக்கள் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
நியூட்ரினோ ஆய்வு மையம்
  • News18
  • Last Updated: July 11, 2019, 9:47 PM IST
  • Share this:
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வரும் நிலையில், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இப்பிரச்னை குறித்த கேள்வி ஒன்றிற்கு மக்கள் குறைதீர்ப்பு துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை கூறியுள்ளார்.


அதில், ”பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.       2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து அமைக்கப்படும். ஆய்வகத்தில் இயற்கையாக உருவாகும் வளிமண்டல நியூட்ரினோக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்.

இதற்காக 51,000 டன் எடை கொண்ட இரும்பு கன அளவி பயன்படுத்தப்படும். காஸ்மிக் கதிர்களிலிருந்து எழும் ஒலியை கட்டுப்படுத்த மலையை குடைந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வகம் எந்த வித கதிர் வீச்சையும் வெளிபடுத்தாததால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இவ்வகையான ஆய்வகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also watch: ஈரோட்டில் நிலத்தடி நீரையும் விட்டுவைக்காத சாயக் கழிவுகள்! மக்கள் வேதனை

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்