கஜா புயல் நிவாரணமாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,146 கோடி ரூபாயை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயல் காரணமாக, லட்சக்கணக்கான தென்னை மரங்களும், பல்லாயிரம் வீடுகளும் சேதமடைந்தன. பல ஆயிரம் மீனவர்கள் தங்கள் படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை இழந்தனர்.
கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக 1,146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே கடந்த 3-ம் தேதி, மாநில பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு 353 கோடியே 70 லட்சம் ரூபாய் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.