மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.196 கோடி நிதி ஒதுக்கீடு...! எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.196 கோடி நிதி ஒதுக்கீடு...! எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
சு.வெங்கடேசன், எம்.பி.,
  • News18
  • Last Updated: November 30, 2019, 5:20 PM IST
  • Share this:
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.196 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வீட்டு மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி , மதுரைக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.196 கோடி நிதியினை மத்திய அரசு விடுவித்துள்ளது. இத்தொகையில் ரூ.156.81 கோடி தொகை செலவளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒட்டு மொத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழ மார்க்கெட்டில் மேற்கொண்ட அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மட்டும் ஏப்ரல் 2018-ல் நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 49.89 ரூபாய் கோடியிலான பெரியார் பேருந்து நிலைய திட்டத்தின் பணிகள் ஜுன் 2020-ம் ஆண்டிலும், 30.71 ரூபாய் கோடியிலான ராஜா மில் முதல் குருவிகாரன் சாலை வரையிலான வைகை ஆற்றுக் கரையோர மேம்பாட்டு பணிகள் ஜனவரி 2020-ம் ஆண்டிலும் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் டெண்டர் நிலையில் இருப்பதாகவும், ஜூன் 2021-ம் ஆண்டுக்குள் அப்பணிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 20.47 கோடி நிதியில் தற்பொழுதைய தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Also see...
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading