"உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிப்பு இல்லை" - மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழு விளக்கம்

மின் கோபுரங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மின் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு வலியுறுத்துள்ளது.

கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 21, 2019, 6:06 PM IST
  • Share this:
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் 24-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஈரோடு உறுப்பினர் கணேசமூர்த்தி கோரிக்கை ஒன்றை விடுத்தார்.


அதில், உயர் அழுத்த மின் கோபுரங்களால் மனிதர்கள், விலங்குகள், தாவரங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்

அத்துடன், கோபுரங்களுக்கு கீழ் வெறும் கைகளில் ட்யூப்லைட்டை பிடித்தால் விளக்கு எரியும் அளவிற்கு மின்சாரம் வெளிப்படுவதாகவும் அச்சம் தெரிவித்தார்.

எனவே, உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதை அவசியமாக்க வேண்டும் என்று கோரினார்.அந்த கோரிக்கையை, சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழுவின் பரிசீலனைக்காக மத்திய அரசு அனுப்பியது.

இக்குழு, அனல் மின் திட்ட பிரிவிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி பெறுவது தொடர்பான கோரிக்கை குறித்து பரிசீலித்தது.

அதன் முடிவில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் வெளியேற்றுவதில்லை என்றும், நிலங்களில் குழாய்கள் பதிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் போன்று உயர் அழுத்த மின் கோபுரங்களினால் பாதிப்புகள் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியமில்லை என்றும் கூறியது.

மேலும், மின் கோபுரங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மின் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு வலியுறுத்துள்ளது.

Also Watch:  வேண்டாம் என்று பெயரிடப்பட்ட பெண்ணின் சாதனை 

First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading