தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்றும் ஆலோசனை..

Youtube Video

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இரண்டாவது நாளாக, தேர்தல் ஆணைய செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

 • Share this:


  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய செயலாலர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று, காலை ஒன்பது முப்பது மணிக்கு தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட மாநில உயர் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடு, சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

  ரஜினி கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி.. தேர்தல் பிரசாரத்தில் கமல் அதிரடி அறிவிப்பு..

  மதியம் ஒன்றரை மணிக்கு செய்தியாளர்களை உமேஷ் சின்ஹா சந்திக்கவுள்ளார். மாலையில் புதுச்சேரி செல்லும் தேர்தல் ஆணைய குழு, அங்கு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: