• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை போலீசார் பரிந்துரை

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை போலீசார் பரிந்துரை

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளது.

  • Share this:
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்துக் கடவுள்களை அவமதித்து வீடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில், இது தொடர்பாக இந்து அமைப்பினரும் பாஜகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also read: திருமழிசை மார்க்கெட்டால் கடும் அவதி; கோயம்பேட்டிலேயே இடம் ஒதுக்குங்கள் - வியாபாரிகள் போராட்டம்

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்பட்டாலும், யூடியூப் சேனலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைத் தடை செய்வதற்கு யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: