ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தலைமறைவான நடிகை மீரா மிதுன் : மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்?

தலைமறைவான நடிகை மீரா மிதுன் : மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்?

நடிகை மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன்

மீரா மீதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டது. . லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பட்டியலினத்தவரை இழிவாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மீரா மிதுன் ஜாமீனில் வெளிவந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. அப்போது மீரா மீதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டது.

    Also Read : இது தான் என் நிரந்தர வீடு... எமோஷனலான சன்னி லியோன்!

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவான நிலையில் மீரா மிதுன் உள்ளதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை லுக் அவுட் கொடுக்க இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மீராமிதுனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் சியமாளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Actress, Actress Meera Mithun, Cinema