ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ் குறித்து விசாரணை - மத்திய குற்றப்பிரிவு தகவல்
ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ் குறித்து விசாரணை - மத்திய குற்றப்பிரிவு தகவல்
சென்னை உயர்நீதிமன்றம்
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி குறித்து தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்ற நீதிபதி, வழக்கை இரண்டு வார காலத்திற்கு தள்ளிவைத்தார்.
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி குறித்து தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றுவதாக கூறி, அரசு வேலை வாங்கித்தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நாவப்பன் மீது அளித்த புகார் மீது விசாரணை நடத்தக் கோரி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், தன்னை ஐ ஏ எஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட நாவப்பன், ஏற்கனவே 50 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுபற்றிய செய்தியை பார்த்த பின், தலைமை செயலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்களுக்கு 2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் அஜராகியிருந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் தீவிர விசாரணை நடத்திவருவதாக தெரிவித்தார்.
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி குறித்து தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்ற நீதிபதி, வழக்கை இரண்டு வார காலத்திற்கு தள்ளிவைத்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.