மத்திய சென்னை மக்களவைத் தொகுதி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசரும் இந்தத் தொகுதியில்தான் முதன்முறையாகக் களம் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி
மத்திய சென்னை
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:34 PM IST
  • Share this:
நட்சத்திர அந்தஸ்த்துடைய வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதியாக உள்ள மத்திய சென்னை, 6-வது மக்களவை தேர்தல் நடந்த 1977-ம் ஆண்டு தான் முதன்முதலாக அறிமுகமானது.

பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற தொகுதிகளை மத்திய சென்னை தன் வசம் கொண்டுள்ளது.

7 முறை வெற்றி பெற்று மத்திய சென்னையில் தி.மு.க தனது கொடியை நிரந்திரமாக நாட்டியிருந்தது. கலைஞரின் குடும்ப உறுப்பினரும் முக்கியத் தலைவருமான முரசொலி மாறன் 1996, 1998 மற்றும் 1999 என மூன்று முறை வெற்றி பெற்றத் தொகுதி மத்திய சென்னை.


முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற 14-வது மற்றும் 15-வது மக்களவைத் தேர்தலில் தயாநிதிமாறன் 2 முறை வெற்றி பெற்று தி.மு.க-வின் பலம் வாய்ந்த கோட்டையாகவே மத்திய சென்னையை உருவாக்கி வைத்திருந்தார்.

ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளரான தயாநிதிமாறன் தோற்கடிக்கப்பட்டார். அ.தி.மு.க-வின் எஸ்.ஆர். விஜயகுமார் 3,33,296 வாக்குகள் பெற்று தி.மு.க வசமிருந்த சென்னையை மொத்தமாக அ.தி.மு.க-வின் வசம் வருவதற்குக் காரணமாக அமைந்தார்.

தி.மு.க-வின் நட்சத்திர வேட்பாளரான தயாநிதிமாறன் 2,87,455 வாக்குகள் பெற்று முதன் முறையாக தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தயாநிதிமாறன் மத்திய சென்னையில் மீண்டும் களம் காண உள்ளார்.கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசரும் இந்தத் தொகுதியில்தான் முதன்முறையாகக் களம் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading