மத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறன்..!

தயாநிதி மாறன்

நடுத்தர மக்களிடம் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை அகியவை குறித்த பிரசாரம் சிறப்பாகவே கைகொடுத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அபார வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய சென்னையில் இம்முறை அதிமுக கூட்டணி சார்பில் பாமக-வின் சாம் பால், திமுக சார்பாக தயாநிதி மாறன், அமமுக சார்பில் தெகலான் பாகவி என நட்சத்திர வேட்பாளர்கள் களம் கண்ட தொகுதியாக மத்திய சென்னை இருந்தது.

மத்திய சென்னையைப் பொறுத்த வரையில் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி ஆன தயாநிதி மாறனுக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என ஆரம்பத்திலிருதே கூறப்பட்டு வந்தது. ஆனால், வாக்குகளைப் பிரிக்கும் இடத்தில் பாமக மற்றும் அமமுக வேட்பாளர்கள் இருந்தனர்.

தன் வழக்கமான பிரசார யுக்திகளையே இம்முறையும் பயன்படுத்தினார் தயாநிதி மாறன். நடுத்தர மக்களிடம் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை அகியவை குறித்த பிரசாரம் சிறப்பாகவே கைகொடுத்தது.

இப்பகுதி சார்ந்த வாக்குறுதிகள், ஐடி துறை வளர்ச்சி குறித்த பிரசாரங்கள் தயாநிதி மாறனின் வெற்றிக்கு உதவி செய்தன. தொகுதியில் நன்கு பரிச்சயமான வேட்பாளர் என்பது தயாநிதி மாறனுக்குக் கூடுதல் பலமாகவே அமைந்தது.

மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வென்றுள்ளார்.
Published by:Rahini M
First published: