மீட்கப்பட்ட பஞ்சலோக மற்றும் கற்சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு

மீட்கப்பட்ட பஞ்சலோக மற்றும் கற்சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு

மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு

பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட பஞ்சலோக மற்றும் கற்சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திருட்டு சிலைகள், கடத்தி பதுக்கப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து எந்த காலகட்டத்தை சேர்ந்த சிலை என கண்டறிந்து தொல்லியல் துறையினர் சான்று அளிக்க வேண்டும். அதனடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி, சமீபத்தில் மீட்கப்பட்ட 22 கடத்தல் கற்சிலைகள் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

  Also read... அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்த சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறை ஆய்வு குழுவினர் வந்தனர். அதில் மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, முன்னாள் இயக்குனர் தயாளன், தஞ்சை பல்கலைக்கழக சிற்ப கலைத் துறை பேராசிரியை சீலா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  அதே போல, சமீபத்தில் மீட்கப்பட்டு திருவொற்றியூரில் வைக்கப்பட்டுள்ள 14 பஞ்சலோக சிலைகள், 3 கற்சிலைளின் தொன்மை குறித்தும் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: