பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக வருகிறது ‘அம்மா ரோந்து வாகனம்’!

சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் இந்த ரோந்து வாகனங்கள் வழங்கப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக வருகிறது ‘அம்மா ரோந்து வாகனம்’!
அம்மா பேட்ரோல் வாகனம்
  • News18
  • Last Updated: August 14, 2019, 4:37 PM IST
  • Share this:
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய ,மாநில அரசு இணைந்து சென்னையில் அம்மா ரோந்து வாகனங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது.

காவல்துறை ஏ.டி.ஜி.பி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அண்மையில் குற்றத்தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிக் குழுவும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மகளிர் காவல் நிலையங்களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரிவின் ஏ.டி.ஜி.பியாக ஐ.பி.எஸ் அதிகாரி ரவி செயல்படுகிறார்.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த இந்த குழுவிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரோந்து வாகனங்களை அளிக்க உள்ளது.


மகளிர் காவல் நிலையங்களுக்கென பிங்க் நிறத்தில் தயாரிக்கப்படுள்ள இந்த ரோந்து வாகனங்கள் பெண்கள் , குழந்தைகளுக்காக இயங்கும் அம்மா ரோந்து வாகனமாக செயல்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் தொடக்கமாக சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் இந்த ரோந்து வாகனங்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த ரோந்து வாகனத்தை சுற்றிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக இயங்கும் தொலைபேசி எண் 1091 மற்றும் குழந்தைகளுக்காக இயங்கும் தொலைபேசி எண் 1098 ஆகிய இரு எண்களும் எழுதப்பட்டுள்ளது.இந்த வாகனங்களை அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் பின் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் காவல்துறை சார்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பார்க்க : கேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களைக் கவரும் மெழுகுச் சிலைகள்

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்