Home /News /tamil-nadu /

தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள்! மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள்! மத்திய அரசு ஒப்புதல்

மருத்துவக் கல்வி இயக்ககம்

மருத்துவக் கல்வி இயக்ககம்

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய அரசு தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு தலா 130 கோடி ரூபாயும் நிதி வழங்கவுள்ளது.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 23 மருத்துவக் கல்லூரிகள் இருந்துவருகின்றன. மேலும், ஆறு மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய சுகாதாரத்துறையிடம் கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தலா 325 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய அரசு தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு தலா 130 கோடி ரூபாயும் நிதி வழங்கவுள்ளது.

    அந்தக் கல்லூரிகள் மூலம் புதிதாக 900 இடங்கள் உருவாகும். இந்தக் கல்லூரிகள் திறக்கப்படும்போது, கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150-ஆக உயரும். மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Medical education

    அடுத்த செய்தி