ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் உயரும் சிமெண்ட் விலை…?! கலக்கத்தில் கட்டுமானத்துறை!

மீண்டும் உயரும் சிமெண்ட் விலை…?! கலக்கத்தில் கட்டுமானத்துறை!

சிமெண்ட்

சிமெண்ட்

இந்த மாதம் சிமெண்டின் விலை 10 முதல் 30 ரூபாய் வரை உயர்த்த சிமெண்ட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் கட்டுமான தொழில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவில் கட்டுமான தொழில் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே வேகத்தில் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வீடு கட்டுவோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

  அதில் முக்கிய பங்கு சிமெண்டிற்கு உண்டு. மூலப்பொருட்களின் விலையேற்றத்தைப் பொருத்து ஒவ்வொரு மாதமும் 1 முதல் 2 விழுக்காடு வரை சிமெண்டின் விலை உயர்த்தி வருகிறார்கள் உற்பத்தியாளர்கள். அதிலும் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் தான் அதிக விலையேற்றம் செய்யப்படுகிறது.

  2 முதல் 3 விழுக்காடு வரை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் 1 முதல் 2 விழுக்காடு விலை குறைக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் பண்டிகை மற்றும் மழைக்காலம் என்பதால் சிமெண்டின் தேவை குறைவாக இருந்தது. இதனால் கடந்த மாதம் மூட்டை ஒன்றிற்கு நான்கு ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது கட்டுமானத் துறை எழுச்சி பெற்றுள்ளதால் தற்போதைய சிமெண்டின் தேவை அதிகரித்துள்ளது.

  இதனால் இந்த மாதம் மூட்டை ஒன்றிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை சிமெண்டின் விலையை உயர்த்த சிமெண்ட் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.

  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.150 முதல் ரூ.160 வரை இருந்தது. ஆனால் இந்த பதினைந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தங்கத்தைப் போலவே சிமெண்டின் விலையும் ஏறுமுகமாகவே இருப்பதால் வீடு கட்டும் சாமானிய மக்கள் தான் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

  Also Read : ''மருது சகோதரர்களை காட்டிக் கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை'' - திருமாவளவன் பேச்சு

  சர்வதேசச் சந்தையில் சிமெண்ட் தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் சிமெண்டின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக சிமெண்ட் விலை மேலும் உயர உள்ளது கட்டுமானத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டே சிமெண்டின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சிமெண்ட் விலையேற்றம் நடைமுறைக்கு வந்தால் ஒரு மூட்டை சிமெண்டின் விலை 500 ரூபாயை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Cement, Home construction