வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வரும்போது சிமெண்ட் விலை குறையும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வரும்போது சிமெண்ட் விலை குறையும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகப்படுத்தும் போது வெளிச்சந்தைகளில் உள்ள சிமெண்ட் விலை குறையும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்டுமானத்திற்கு சிமெண்ட் முக்கியமான பொருளாக இருப்பதாகவும், சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் உருவாகியிருப்பதாக பேசினார்.

    மேலும் அண்டை மாநிலங்களில் 300 முதல் 350 வரை விற்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் 450 முதல் 490 வரை விற்கப்படுவதாகவும் அருள் பேசினார். ஆலை அதிபர்கள் கூடி சிமெண்ட் விலை உயர்த்துவதை தவிர்க்க அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பாமக உறுப்பினர் அருள் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஜுன் மாதம் 490 வரை சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலை குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

    TANCEM மூலம் புதிய கிளை உருவாக்கப்பட்ட பின் 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    Also read: 16 டோல்கேட் இருக்க வேண்டிய தமிழகத்தில் 48 டோல்கேட் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

    தற்போதய நிலவரப்படி முதல் தர சிமெண்ட் 420 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள வலிமை சிமெண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின் வெளிச்சந்தைகளில் சிமெண்ட் விலை குறையும் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: