சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைந்து ரூ.435க்கு விற்பனை!

சிமெண்ட்

மேலும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

 • Share this:
  சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

  முன்னதாக இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாட்சி ஜெயராமன், தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  இதற்கு பதிலளித்து பேசிய, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சி காலம் முதல் படிப்படியாக அதிகரித்து வந்ததாகவும், கடந்த மார்ச் மாதம் 420 ஆக இருந்த சிமெண்ட் விலை தற்போது 490 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார். விலையேற்றம் என தெரிந்தவுடன் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, சிமெண்ட மற்றும் கம்பி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது 460 ரூயாபாக உள்ளதாக குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச உள்ளதாக கூறிய அவர், மேலும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தற்போதைய விலையில் இருந்து மேலும் ரூ.25 குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால், சிமெண்ட் விலை ரூ.435ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: