சினிமா பாணியில் கொள்ளை; ரூ.6 கோடி மதிப்பிலான செல்போன்களை தூக்கி சென்ற கொள்ளையர்கள்!

கொள்ளை

டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கி  கீழே தள்ளி கண்டெய்னர் லாரியை கடத்திசென்றுள்ளனர். 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போயிருப்பதும் இந்த சம்பவத்தில் 7 பேருக்கு தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  கர்நாடகாவில் லாரி ஓட்டுனரை தாக்கிவிட்டு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்பேன்களை 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.

  காஞ்சிபுரத்தில் செல்போன்கள் தயாரிக்க கூடிய தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்துநேற்று  ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் கோலார் நோக்கி சென்றுகொண்டிருந்தது  கர்நாடக மாநில எல்லைப்பகுதியான முல்பாகல் அடுத்த தேவராயசமுத்ரா எனும் இடத்தில்  லாரி சென்று கொண்டிருந்த போது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் லாரியை வழிமறித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கி  கீழே தள்ளி கண்டெய்னர் லாரியை கடத்திசென்றுள்ளனர்.பின்னர்  காயத்துடன் லாரி டிரைவர் மற்றும் கிளினீனர் கீழே விழுந்து கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.  மேலும் அவர்கள்  இதுகுறித்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்துனேன் வண்டியை பிடிச்சுட்டாங்க.. என்ன செய்யலாம்?- தலைமை காவலரிடம் ஐடியா கேட்கும் கடத்தல்காரரின் வைரல் ஆடியோ


  தகவல் அறிந்து வந்த  போலீசார் விசாரணை மேற்கொண்டதில் லாரியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் லாரியின் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையர்கள் 7 பேர் கொண்ட கும்பல் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோலார் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க: நாமக்கல்லில் கொள்ளையடிக்க வந்து ஏடிஎம்-ல் சிக்கிக்கொண்ட வடமாநில இளைஞர்.. (வீடியோ)


  மேலும் லாரி கடத்தப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த அக்டோபர் மாதம் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி 15 பேர் கொண்ட வட மாநில திருட்டு கும்பல் டிரைவரை தாக்கிசெல்போன்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
  Published by:Murugesh M
  First published: