ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கமல்ஹாசன் மட்டுமல்ல, முதல் தேர்தலில் தோல்வியை தழுவிய பிரபலங்கள்!

கமல்ஹாசன் மட்டுமல்ல, முதல் தேர்தலில் தோல்வியை தழுவிய பிரபலங்கள்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் தோல்வியை தழுவிய நிலையில், அவரை போலவே பல்வேறு பிரபலங்களும் தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வியையே சந்தித்துள்ளனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் தோல்வியை தழுவிய நிலையில், அவரை போலவே பல்வேறு பிரபலங்களும் தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வியையே சந்தித்துள்ளனர்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால் கமல் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கையின்போது கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது . எனினும், இறுதியில் வானதி சீனிவாசம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  நடிகர் கமல்ஹாசன் போலவே பல்வேறு பிரபலங்களும் தங்கள் சந்தித்த முதல் தேர்தலில் தோல்வியையே தழுவியுள்ளனர்.

  குல் பனக்: 

  பிரபல பாலிவுட் நடிகையான குல் பனக், ஏராளமான  தொலைக்காட்சி நாடகங்கள் , வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.  ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2014ம் ஆண்டு  பொதுத்தேர்தலில்  சண்டிகார்க் தோகுதியில் போட்டியிட்டார். எனினும்,  இந்த தேர்தலில் அவர் தோல்வியே அடைந்தார்.

  ராக்கி சவாந்த்:

  பாலிவுட் நடிகையான ராக்கி சவாந்த், கன்னடா, மராத்தி, தெலுங்கு, தமிழ்  ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இந்தி பிக்பாஸ் தொடரிலும் அவர் பங்கேற்றுள்ளார். ராஷ்ட்ரிய ஆம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய இவர் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல்ல் மும்பை வட-மேற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

  மகேஷ் மஞ்சரேக்கர்:

  இந்தி திரைப்பட கலைஞரான மகேஷ் மஞ்சரேக்கர் நடிகர், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை உடையவர். 2014 மக்களவை தேர்தலில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் மும்பை வட-மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.

  ரவி  கிஷான்:

  மற்றொரு பாலிவுட் நடிகரான ரவி கிஷான் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து  உத்தரபிரதேசத்தின் ஜவுன்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த அவர் பின்னர் பாஜகவில் இணைந்து  2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

  ஸ்மிருதி இரானி:

  தொலைக்காட்சி நடிகையான ஸ்மிருதி இரானி, 2003 ல் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து  மகாராஷ்டிரா இளைஞர் பிரிவின் துணைத் தலைவரானார். 2004 ஆம் ஆண்டு 14 வது மக்களவைக்கான பொதுத் தேர்தலில், டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்  தொகுதியில் போட்டியிட்ட அவர்,  கபில் சிபலிடம் தோல்வியுற்றார்.  தற்போது, உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதி எம்.பி.யாக உள்ள ஸ்மிருதி இரானி  ஜவுளி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சராகவும் உள்ளார்.

  மனோஜ் திவாரி:

  திரைப்பட நடிகர், பாடகர் என பன்முகத்தன்மை  வாய்ந்த மனோஜ் திவாரி, 2009 பொதுத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகி ஆதித்யநாத்திடம் அவர் தோல்வியடைந்தார்.  பின்னர் பாஜகவின் இணைந்த மனோஜ் திவாரி, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

  மேலும் படிக்க.. 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு செல்கின்றனர்..

  ராஜேஷ் கண்ணா:

  இந்தி திரப்பட உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக கருதப்பட்டவர் ராஜேஷ் கண்ணா. 1991 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போட்டியிட்ட ராஜேஷ் கண்ணா, பாஜகவின் அத்வானியிடம் தோல்வி அடைந்தார்.

  சத்ரூகன் சின்ஹா:

  பாலிவுட் நடிகர் சத்ரூகன் சின்ஹா பாஜகவின் இணைந்து  தனது முதல் தேர்தலில் நடிகர் ராஜேஷ் கண்ணாவை எதிர்த்து போட்டியிட்டார். எனினும் அந்த தேர்தலில் அவர் தோல்வியையே சந்தித்தார்.

  பவன் கல்யான்:

  தெலுங்கு நடிகரான பவன் கல்யான், 2014ம் ஆண்டு ஜன சேனா என்ற தனது கட்சியை தொடங்கினார். பின்னர், 2019ம் ஆண்டு  நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியடைந்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: BJP, Congress, Kamal Haasan, TN Assembly Election 2021