பிப்ரவரி 10-ம் தேதி சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

பிப்ரவரி 10-ம் தேதி சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்  சுனில் அரோரா

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தலைமைத் தேர்தல் அதிகாரி, காவல் துறை உயர் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

  • Share this:
தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வுசெய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், தலைமைச் செயலாளர் உமேஷ் சின்கா மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு வரும் 10-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இந்தக் குழுவினர் நண்பகல் 12.15 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரி, காவல் துறை உயர் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பயணத்தின் இரண்டாவது நாளான 11-ம் தேதி, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அன்றைய தினமே புதுச்சேரிக்கு செல்லும் தேர்தல் ஆணைய குழுவினர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஆய்வு நடத்துகின்றனர். 12-ம் தேதி இரவு கேரளாவுக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Published by:Vijay R
First published: