தூத்துக்குடி சேர்ந்த வழக்கறிஞர் அதிசய குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்த சிசிடிவி பதிவுகள், ஒரு நாள் மட்டுமே வைத்து இருந்ததாகவும் அதன்பின் அழிந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான சிசிடிவி காட்சி பதிவுகளை அழித்த விவகாரம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதுபோன்று தமிழக காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறலை தடுக்கவும், காவல்துறையினரை கண்காணிக்கவும், சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு ஆதாரமாக அந்த சிசிடிவி பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் சிசிடிவி பதிவுகள் ஒருவருடத்திற்கு பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக 4 வாரத்தில் விரிவான பதில் அளிக்க தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.