41 கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள்: வெளியானது சிசிடிவி காட்சிகள்!

தேர்வு எழுதும் போது விடைத்தாள்கள் மாற்றி கொள்வது, விடைகளை தேர்வு அரங்கில் அனைவருக்கும் சொல்வது உள்ளிட்டவை தேர்வு ஒழுங்கு குழுவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

41 கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள்: வெளியானது சிசிடிவி காட்சிகள்!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 19, 2019, 1:31 PM IST
  • Share this:
தமிழகத்தில் 41 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதியது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மூலம் மாணவர்கள் சேர்ந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாதா மருத்துவக் கல்லூரி, மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 41 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதியது தெரிய வந்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக தேர்வு அட்டவணை படி மாதா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெவ்வேறு தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு எழுதும் போது விடைத்தாள்கள் மாற்றி கொள்வது, விடைகளை தேர்வு அரங்கில் அனைவருக்கும் சொல்வது உள்ளிட்டவை தேர்வு ஒழுங்கு குழுவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தேர்வு ஒழுங்கு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் மாணவர்கள் அங்கும் இங்கும் சென்று விடைத்தாள்களை மாற்றிக் கொள்வது, புத்தகங்களை மாற்றிக் கொள்வது அம்பலமாகியுள்ளது.

Loading...

இதையடுத்து அந்த கல்லூரி மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு மையமாக செயல்ப்ட முடியாது என்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 25 பேரும், ஒரு மூன்றாம் ஆண்டு மாணவரும் தேர்வு எழுதியது செல்லாது என தேர்வு ஒழுங்கு குழு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்தாண்டு தேர்வு எழுதிய 15 பேரும் வரும் பிப்ரவரியில் மறுத்தேர்வு எழுத உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதி பராசக்தி கல்லூரியில் தேர்வு நடத்துபவர்களே மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவி புரிந்ததால் அந்த கல்லூரி இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு மையமாக செயல்பட முடியாது என தேர்வு ஒழுங்கு குழு தெரிவித்துள்ளது.

Also see...

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...