ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் , புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவக்கம் - எடப்பாடி பழனிசாமி

அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் , புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவக்கம் - எடப்பாடி பழனிசாமி

கோப்புப் படம்

கோப்புப் படம்

110 விதியின் கீழ் வனம், சுற்றுச்சூழல், பள்ளிக் கல்வி, உயர் கல்வித்துறைகளில் புதிய அறிவிப்புகள்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 282 அரசுப் பள்ளிகளில் 48 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 48 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 282 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

  10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 15 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும்,  30 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் இதற்காக 96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.  10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் 25 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

  தமிழக சட்டப்பேரவை

  சென்னை வேளச்சேரியில் கட்டப்படும் புதிய வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு உட்கட்டமைப்பு வசதியை மேற்கொள்ள 22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை மிக அருகில் காணும் வகையில் விலங்குகள் உலாவிட உலகம் அமைப்பதற்கு 11 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.

  திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் 18 கோடி செலவில் அமைக்கப்படும்.  நெருப்புக்கோழி, மலைப்பாம்பு ஆகிய விலங்குகள் கொண்டு நடுத்தர வன உயிரின பூங்கா 10 கோடியில் உருவாக்கப்படும். வனங்களில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க 23 கோடி ரூபாய் ஒதுக்கி சிறப்பு வனக்காவல் படை உருவாக்கப்படும் என்றும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.  யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க எக்கு கம்பியுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் 21 கோடி செலவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: TN Assembly