பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி வழக்கு: கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!

news18
Updated: July 12, 2019, 10:59 AM IST
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி வழக்கு: கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!
மாதிரிப்படம்
news18
Updated: July 12, 2019, 10:59 AM IST
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொறுத்த உத்தரவிடகோரிய வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையிலும், பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கோபி கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை விளக்கமளித்தால்தான் சரியாக இருக்குமென தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளரை எதிர் மனுதாராக தானாக முன்வந்து சேர்த்ததுடன், வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...