முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை!

சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை!

அன்வர் ராஜா எம்.பி

அன்வர் ராஜா எம்.பி

வக்ஃபு வாரிய தலைவராக உள்ள அன்வர் ராஜவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக, அதிமுக எம்பி அன்வர் ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வைச் சேர்ந்த அன்வர் ராஜா ராமநாதபுரம் எம்பி-ஆகவும் வக்ஃபு வாரியா தலைவராகவும் உள்ளார். மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மதுரை சிபிஐ அதிகாரி கார்த்திகை சாமி, காவல்துறை ஆய்வாளர் வேலாயுதம், மதுசூதனன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அன்வர் ராஜா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சிபிஐ நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யயுள்ளது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி எம்பி அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் சிட்டிங் எம்பி அன்வர் ராஜா வுக்கு சீட் வழங்கப்படாமல் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Also see... அடுத்த பிரதமரை அமமுக எம்.பி.க்களே தேர்வு செய்வர்- டிடிவி 

First published:

Tags: Anwar raja, CBI raid, Wakf Board