முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள், இதனை கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லம், மும்பை, டெல்லி என 7 முதல் 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022
இந்த சோதனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், கணக்கை நான் மறந்துவிட்டேன். எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்களோ? இதனை பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBI raid, Karti Chidambaram, P.chidambaram