தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவு

சிமெண்ட்

சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சென்னையைச் சேர்ந்த கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர்.செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

  Also Read : : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் மாற்றமா? புதிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  எனவே, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்  மற்றும் சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிமெண்ட் விலையேற்றம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி ஜூன் 3- ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
  Published by:Vijay R
  First published: