ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மைக்கேல்பட்டி பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

மைக்கேல்பட்டி பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

CBI ENQUIRY | சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பள்ளியில் படித்த மாணவிகள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மைக்கேல்பட்டி பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் சுமார் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டியில் படித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி விஷமருந்தி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார். மாணவி உயிரிழந்தையடுத்து விடுதி காப்பாளர் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, மாணவியின் தற்கொலை வழக்கை மதமாற்றம் கீழ் பதிவு செய்ய வேண்டும் என பெற்றோர்களும், பாஜகவினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு.. இருவர் கைது!

இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 31ம் தேதி சிபிஐக்கு வழக்கை மாற்றியது.

இதனை தொடர்ந்து இன்று மைக்கேல் பட்டியில் மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் சரியாக 12.20 மணிக்கு விசாரணையை தொடங்கினர். சிபிஐ இணை இயக்குனர் வித்தியாகுல்கர்னி தலைமையில் சுமார் 14 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பள்ளியில் படித்த மாணவிகள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பள்ளி மற்றும் வீடுகளை சுற்றி நூறு மீட்டர் தொலைவிற்கு புகைப்படம் வீடியோ எடுத்து கொண்டனர்.

மாணவிகளிடம்,உயிரிழந்த மாணவி குறித்தும், மதமாற்றம் குறித்து கேட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டதாக தெரிவித்தனர்.

Published by:Esakki Raja
First published:

Tags: CBI, Crime News