• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிகளில் சிபிஐ ஆய்வு!

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிகளில் சிபிஐ ஆய்வு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடுக்கு அனுமதி அளித்த தாசில்தாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று தூத்துக்குடி வந்த 18 பேர் அடங்கிய சிபிஐ குழு, துப்பாக்கிச் சூடு நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்று ஆவணங்களை சேகரித்தனர்.

    இதையடுத்து, இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வந்த சிபிஐ அதிகாரிகள், கலவரம் நடந்த பகுதி மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதிகளை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் விளக்கங்களை கேட்டறிந்தனர். பின்னர் துப்பாக்கிச் சூடுக்கு அனுமதி கொடுத்த தாசில்தார் சந்திரன், துணை தாசில்தார் கண்ணன் ஆகியோரிடம் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: