ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விஸ்வரூபம் எடுக்கும் விசா முறைகேடு வழக்கு... அடுத்தடுத்த சி.பி.ஐ சோதனை வளையத்துக்குள் எம்.பி கார்த்தி சிதம்பரம்..

விஸ்வரூபம் எடுக்கும் விசா முறைகேடு வழக்கு... அடுத்தடுத்த சி.பி.ஐ சோதனை வளையத்துக்குள் எம்.பி கார்த்தி சிதம்பரம்..

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

விசா முறைகேடு வழக்கில் தற்போது இரண்டாம் முறையாக சோதனை நடத்துவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் இரண்டாவது முறையாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராஃப்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான ஏழு அதிகாரிகள் மதியம் 2 மணியிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2009-2014ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 17 ம் தேதி சென்னை, பஞ்சாப், டெல்லி, கர்நாடகா என கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ நடத்தினர்.

குறிப்பாக கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தைக் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால் சீனாவிலிருந்து சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தை அணுகியதாகவும், இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 263 விசாக்கள் கார்த்தி சிதம்பரம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுத்ததாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே-17 ம் தேதி சோதனை நடத்தினார்கள்.

மேலும், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை 2 வது குற்றவாளியாக சேர்த்து சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் பெயர் சேர்க்கப்பட்டு அப்போதே பாஸ்கர ராமனை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பைகிராஃப்ட்ஸ் சாலையிலுள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் உள்ள சில அறைகள் பூட்டப்பட்டிருந்ததாகவும், பூட்டப்பட்டிருந்த அறைகளை சோதனை செய்ய தற்போது இரண்டாம் முறையாக சோதனை நடத்துவதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: CBI, Karthi chidambaram