ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை - சிபிஐ!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை - சிபிஐ!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)

துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், 20 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, சிபிஐ காவல் கண்காணிப்பாளர் சரவணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், 20 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக எஸ்பி தலைமையில் பிற மாநில சிபிஐ கிளைகளில் பணிபுரியும் அதிகாரிகளை கொண்டு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முழு உண்மையை கண்டுபிடிப்பதற்காக தூத்துக்குடி மில்லர்புரத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

தனிநபர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு துப்பாக்கி சூட்டில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள சிபிஐ காவல் கண்காணிப்பாளர்,

மனுதாரர் தனது புகாரில் தெரிவித்துள்ள நபர்களின் தொடர்பு குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் புகாரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க சிபிஐக்கு உத்தரவிட்டு , நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Also read... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் 20 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CBI, Lok Sabha Key Constituency, Thoothukudi firing