• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி!

சிபிஐ

சிபிஐ

சிபிஐக்கு மாறுவதால் முழுமையான ஆர்வத்தோடு சிபிசிஐடி விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புதிய அரசாணையை வெளியிடுவதில் தமிழக அரசு தாமதம் காட்டுவதால் வழக்கு சிபிஐ-க்கு மாறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி, தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் குடும்பத்தின் விவரங்கள் அடங்கி இருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தற்போதையை அரசாணையை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய அரசாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்காததால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியது. இதனால் ஓரிரு நாட்களில் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் வழக்கு சிபிஐக்கு மாறுவதால் முழுமையான ஆர்வத்தோடு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கான அறிகுறியும் இன்றி சிபிசிஐடி விசாரணையும் முழுவீச்சில் நடக்காததால் குற்றவாளிகள் தடயங்களை மறைப்பதற்கும், தப்புவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என மூத்த காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see... அதிமுக VS திமுக... யாருடைய தேர்தல் அறிக்கை நம்பிக்கை  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: