தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ம் தேதி மாவட்ட. ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின்போது வன்முறை வெடித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்து இருந்ததாகவும் 71 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக 17 பேரை ஏப்ரல் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றபத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.