ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது இந்நிலையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் மதியம் 3 மணியளவில் சோதனை நிறைவடைந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சிபிஐ ரெய்டு முடிவடைந்துள்ள நிலையில் கார்த்தி சிதம்பரம் மீதான முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கார்ததி சிதம்பரத்தின் பெயர் இரண்டாவது நபராக சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக பாஸ்கர ராமனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
Also Read : திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.. தமிழக அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
இந்த சோதனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்ற கணக்கு நினைவில் இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும், சிபிஐ சோதனையை பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே. டெல்லி மற்றும் சென்னையில் தனது வீடுகளில் சிபிஐ நடத்தும் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சோதனையின் போது சிபிஐ அதிகாரிகள் காண்பித்த முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றும், சோதனை நடத்த வந்த தருணம் சுவாரஸ்யமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Karthi chidambaram, P.chidambaram