தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வருவாய் துறை மற்றும் போலீசிடம் சிபிஐ விசாரணை!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வருவாய் துறை மற்றும் போலீசிடம் சிபிஐ விசாரணை!
தூத்துக்குடியில் நடந்த போராட்டம்.(கோப்புப் படம்)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த 40 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலம் பெற்றிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி போராட்டத்தின் நூறாவது நாள் என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
தற்போது, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த 40 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலம் பெற்றிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிகளை அதிகாரிகளுக்கு வழங்க உத்தரவிட்டது யார்? காலுக்குக்கீழ் சுடாமல், தலையிலும் முகத்திலும் சுட உத்தரவு பிறப்பித்தது யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.