சி.பி.சி.ஐ.டி போலீசார் முகிலனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தனது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கூறியதாகவும், கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான சில உண்மைகளை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிக்க உள்ளதாகவும் முகிலன் கூறினார்.

Web Desk | news18
Updated: July 8, 2019, 8:38 AM IST
சி.பி.சி.ஐ.டி போலீசார் முகிலனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!
முகிலன்
Web Desk | news18
Updated: July 8, 2019, 8:38 AM IST
பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் முகிலனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். தான் கடத்தப்பட்டதன் பின்னணியில் தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையுமே இருப்பதாக முகிலன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டதற்கு பிறகு காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் 142 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது நண்பர் அளித்த வீடியோ மூலம் திருப்பதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்புதற்கு எதிராக முழக்கமிட்டபடி போராட்டம் நடத்தியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு

முகிலன் தனது சொந்த ஊர் காட்பாடி என்று கூறியதால் அவரை திருப்பதி ரயில்வே போலீசார் காட்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலனுக்கு முதல் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

சென்னையில் முகிலனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

அப்போது முகிலன் தன்னை நாய் கடித்திருப்பதாக கூறியதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி சங்கரன் மற்றும் எஸ்பி மல்லிகா ஆகியோர் முகிலனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முகிலனின் வாக்குமூலம் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் முகிலன்


விசாரணையின் போது, ஒரு கும்பல் தன்னை கடத்திச்சென்று கொடுமைப்படுத்தியதாகவும், பல மாநிலங்களில் சுற்றித்திரிந்த பிறகுதான் திருப்பதி சென்றதாகவும் முகிலன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

பாலியல் வழக்கில் முகிலனை போலீசார் கைது செய்தனர்

இதைத் தொடர்ந்து குளித்தலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக முகிலனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை பெற வைத்தனர்.

முகிலன் பரபரப்பு குற்றச்சாட்டு

தனக்கு நெஞ்சு வலிப்பதாக முகிலன் கூறியதால் அவருக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் இரவில் ராயபுரத்தில் உள்ள பெருநகர 2-ம் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முகிலன், தன்னை கடத்திச் சென்றவர்கள் தனது உடலில் ஊசி செலுத்தியதாகவும், இதனால், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

உண்மைகளை நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பேன்

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தனது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கூறியதாகவும், கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான சில உண்மைகளை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிக்க உள்ளதாகவும் முகிலன் கூறினார்.

முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உத்தரவு

நீதிபதியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும் முகிலன் கூறியுள்ளார். இதனால், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலையில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டார்.

இதையடுத்து முகிலனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அவரை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க... மாயமானது முதல் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டது 


#Breaking| பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் முகிலன்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...