தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது ஏற்கனவே ஐந்து பெண்கள் பாலியல் மற்றும் பண மோசடி புகார் தெரிவித்துள்ளானர். இந்நிலையில் தற்போது ஏழாவதாக சென்னையை சேர்ந்த மேலும் ஒரு பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட சிறையில் இருந்த காசியை 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஏழாம் தேதி காசிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.
காசியை கஸ்டடியில் எடுத்த சிபிசிஐடி போலீசார் சென்னை பெண் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சென்னை சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவில் வந்து முகாமிட்டு ஏற்கனவே காசியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆபாச வீடியோக்களை ஆய்வு மேற்கொண்டு காசியிடம் அதில் இருக்கும் பெண்கள் குறித்த விவரங்கள் சேமிக்கப்பட்டு சாட்சியாக பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்பு காசியை சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜர் படுத்திய நிலையில் காசியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் ,மேலும் இந்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது காசியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...சென்னையில் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை.. 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை..
ஆனால் இதுவரை 6 பெண்கள் மட்டுமே தைரியமாக காசி மீது புகார் அளித்துள்ளனர். ஆகவே காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இது தொடர்பான புகாரை அளிக்கும் பட்சத்தில் அவர்களின் விபரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும் என்றும் அதன் மூலம் காசி என்னும் பாலியல் குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்று தர முடியும் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime | குற்றச் செய்திகள், Cyber fraud, Nagarkovil, Sexual abuse