• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓடும் ரயிலில் கொள்ளை: சிபிசிஐடி போலீசாரின் அடுத்த நடவடிக்கை?

ஓடும் ரயிலில் கொள்ளை: சிபிசிஐடி போலீசாரின் அடுத்த நடவடிக்கை?

கொள்ளை நடந்த ரயில் (கோப்புப் படம்)

கொள்ளை நடந்த ரயில் (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஓடும் ரயிலில் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும், மோஹர் சிங்கை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு சேலத்திலிருந்து சென்னை சென்ற ரயிலின் மேற் கூரையை உடைத்து, ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மோஹர் சிங், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேச மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தமிழகம் அழைத்து வந்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கைதானவர்களை அடையாளம் காட்டுவதற்காக விருத்தாச்சலம் ரயில்வே போலீசாரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்று அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளையடிக்கப்பட்ட நோட்டு பழைய ரூபாய் நோட்டுகள் என்பதால், அதனை மாற்றுவதற்கு உதவியது யார் என்றும், அந்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: