• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிஎன்பிஎஸ்சி முறைகேடு... மேலும் 3 பேரை கைது செய்த சிபிசிஐடி...!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு... மேலும் 3 பேரை கைது செய்த சிபிசிஐடி...!

Youtube Video

  • News18
  • Last Updated :
  • Share this:
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ஊழியருக்கு உதவிய 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 குரூப் 2ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில் முக்கிய இடைத்தரகராக ஜெயக்குமாரிடம் மூன்றாம் நாள் போலீஸ் காவல் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தனை 5 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தன் ஆகிய இருவரையும், முறைகேடு நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் ஓம் காந்தன் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. அவருடன் நடத்தப்பட்ட விசாரணையில்,ஒம் காந்தனின் மூன்று கூட்டாளிகள் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர்களாக உள்ள இவர்கள், விடைத்தாளை திருத்தி மாற்றியபோது உதவியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில்  ஏற்கனவே 36 பேர்  கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: