Home /News /tamil-nadu /

சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு; கோவையில் சிபிசிஐடி தீவிர விசாரனை

சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு; கோவையில் சிபிசிஐடி தீவிர விசாரனை

Ramajeyam Murder Case | திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாககோவையில் சிபிசிஐடி சிறப்பு குழுவினர் மாருதி சுசூகி வெர்ஷா கார் உரிமையாளர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான  ராமஜெயம் திருச்சி - கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம்  கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கிடப்பில் இருந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில்  சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயமாக மாருதி சுசூகி வெர்ஷா வாகனம் கொலை சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில்  அந்த பகுதியில் சென்றது  அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இந்த மாருதி சுசுகி வெர்ஷா வாகனம் கொலையாளிகள் பயன்படுத்தியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகின்றது.

Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு, 3 டிஎஸ்பிக்கள்  தலைமையில் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாருதி சுசுகி வெர்ஷா வாகனத்தின் உரிமையாளர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீசார்  திரட்டி , வாகன உரிமையாளர்களின் வீட்டு முகவரிக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கோவையில் மட்டும் 250க்கும் மேற்பட்ட மாருதி சுசுகி வெர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது. மொத்தம் 1400 கார்களின்  உரிமையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவது குறிப்பிடதக்கது.
Published by:Raj Kumar
First published:

Tags: CBCID Police, Coimbatore, KN Nerhu

அடுத்த செய்தி