நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: 2 பெண்கள் உட்பட 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: 2 பெண்கள் உட்பட 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு
நீட் தேர்வு (கோப்புப் படம்)
  • News18 Tamil
  • Last Updated: February 12, 2020, 10:22 AM IST
  • Share this:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 2 பெண்கள் உட்பட  10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் என இருவர் மட்டுமே முதன் முதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை 5 மாணவர்கள்,  6 மாணவர்களின் பெற்றோர் ஒரு இடைத்தரகர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் படித்து வந்த  பவித்திரன் என்ற மருத்துவ மாணவன் சிபிசிஐடி போலீ சாரால் கைது செய்யப்பட்டார். நீட் தேர்வில் மருத்துவ மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்தது. ஹால் டிக்கெட்டில் உண்மையான மாணவர்களின் புகைப்படத்தை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர்களை பற்றி தகவல் தெரியவில்லை. இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 2 பெண்கள் உட்பட  10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.இவர்களைப் பற்றிய பெயர் ,முகவரி தகவல் தெரிந்தால் உடனடியாக சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் இந்த பத்து பேரையும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.அதே நேரத்தில் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ரஷீத் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Also See...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்